06/06/2015
கீழ் தஞ்சாவூர் - மயிலாடுதுறை -திருப்புகலூர் எதிரிலுள்ள ரோட்டில் சென்று திருச்செங்காட்டு
வழியே 4 km இவ்வூர்வுள்ளது
. பல நூற்றாண்டாக மண்ணில் புதைந்திருந்த ஐந்து
பொக்கிஷத்தை , விலைமதிக்கமுடியாத மாணிக்கத்தை இப்படியா போடுவது .அதுவும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் செருந்துனை
நாயனார் பிறந்த ஊர் ஆகும் .இவ்வூரில் திருமூலநாதர்
சிவாலயம் ஒன்று உள்ளது .அத்திருகோவில்
செருந்துனை நாயனாரின் திருமூர்த்தம் வைக்கப்படுள்ளது .
இவ்வூரில்
நத்தம் மேடு என்ற இடத்தில் ஐந்து
சிவலிங்கத்திருமேனிகளும் அருள்பாலித்து வந்தனர் .அதில் அனைவரையும் கவரும் வகையில் 32 பட்டை
கொண்ட சிவலிங்கத்திருமேனியும் ஒன்று .மிக அழகுவாய்ந்த
இவ்ஐந்து சிவலிங்கத்திருமேனிக்கும் இன்று
ஒரே நாளில் பிரதிஷ்டையும் ,மேற்கூரை
திருப்பணியும் நடைபெற்றது.மறுநாள் 07/06/2015 அன்று திருகுட நன்னீராட்டு
விழா நடைபெற்றது.பெருந்திரளாக அக்கிராமமக்கள் கூடிவந்தனர் .குறிப்பாக இவ்வூர் கிராமத்தலைவர் மிகவும்
ஒத்துழைப்பு தந்தார்கள் .செங்கல் , சிமெண்ட் ஆகிய பொருட்களை திரு.இராதா கிருஷ்ணன் அவர்கள்
கொடுத்து உதவினார்கள் , தரை போடும் செலவினை
திரு.ஆறுமுகம் அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளார்
. இத்திருப்பணி மேற்கூரை அமைத்த செலவினை நமது
(கோச்செங்கண்ணாயனார்சிவத்தொண்டு
சிவசபைஅமைப்பாளர்) சிவ.திரு.கபாலிநேசன்
ஐயா சிவசபைக்கு வழங்கினார் .
தொடர்புக்கு-சிவ . செல்லையன்-9626392775
அ )அருள்மிகு தர்மேஸ்வரர்