107.VENBAKKAM

06/12/2015
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் ,வெண்பாக்கம் ( திருமாற்பேறு என்ற  பாடல்பெற்றத்  திருத்தலம் அருகில் உள்ள கிராமம் )
திருமாற்பேறு அடியார் சிவ.வஜரவேல் ஐயா  தொலைபேசியில் சுவாமிக்கு மேற்கூரை அமைத்து தரும்படி அழைத்தார் .சுவாமிக்கு மேற்கூரை அமைக்க சென்றோம் ஆனால் திருவருளால் திருக்கோவில் திருப்பணி நிறைவுற்று  இன்று திருகுட நன்னீராட்டு விழா சிறப்பாக நடந்ததேரியது ..நம் சிவசபை அன்பர்கள் திரு.கபாலிநேசன் ஐயா ( வண்ணப்பூசு  வேலையும் ),  கோயம்பத்தூர் சிவ.வசந்தகுமார் ஐயா  ரூ.25000,சிவ.பாரத்கணேசன் ஐயா 10000 செங்கல் வழங்கியுள்ளர்கள் .
 மேலும் நம் சபைசார்பாக நந்தியம் பெருமானுக்கு மேற்கூரை அமைத்துள்ளான் . மேற்கோண்ட ஆன செலவுகளை இக்கிராமமக்களும் ,அடியார் பெருமக்களும் ஏற்றுகொண்டனார் . ஸ்தபதி திரு.ஆதிநாதன்  அவர்கள் மிக குறைந்த தொகையை பெற்றுக்கொண்டு திருப்பணியை நிறைவு செய்து கொடுத்தார் .

தொடர்புக்கு- திரு.வஜ்ரவேல்-9894920411











106.PERUVAELVI

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
25/10/2015
பெருவேலி -அருள்மிகு காளத்தீசுவரர் ,மதுராந்தகம் -சித்தாமூர் வழியாக இவ்வூரை அடையலாம் .சிவபெருமான் கருணையால் மேற்கூரைத் திருப்பணியும்,திருவேள்வியும் நடைபெற்றது .
தொடர்புக்கு-திரு.பார்த்திபன் - 9787909427,திரு.பிரபு -9843669689.

திருப்பணிக்குப் பின்பு





105.KOLATHUR


25/10/2015
கொளத்தூர்-அருள்மிகு ரத்தனகிரீசுவரர் ,மதுராந்தகம் -சித்தாமூர் ரோடுகடை  வழியாக சிறியமலை உள்ளது அம்மலைமேல் சுவாமிக்கு மேற்கூரை இன்று அமைக்கப்பட்டது.இத்திருப்பணிக்கு திருமதி.ரமணா ரச்சகொண்டா சியாமளா அம்மா ரூ .5000 வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு-திரு.சண்முகம்-8870802450,திரு.கமலக்கண்ணன் -9524882663


104.KONDANGKARAI

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

04/10/2015
அருள்மிகு கச்சபேசுவரர் திருக்கோவில் ,கொண்டங்கரை (காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோனம் செல்லும் வழியில் சேந்தமங்கலம் இடது பிரிவில் நெமிலி வழியே இவ்வூரை அடையலாம் .இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரை அமைத்து வேள்வியும் நடைபெற்றது இத்திருப்பணிக்காண செலவு ரூ .15000 திருமதி.சரஸ்வதி பரமசிவம் அவர்கள் நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு-திரு.நடராஜன்-9786168584


திருப்பணிக்குப் பின்பு





103.SANGEETHAMANGALAM

23/08/2015
சங்கீதமங்கலம் - அருள்மிகு சங்கீதமங்கலேசுவரர் திருக்கோவில் ,சிவபெருமான் கருணையினால் 23/08/2015 அன்று சிவலிங்க திருமேனியை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைது , சுவாமி இருந்த அதே இடத்தில் உயர்த்தி ,செங்கல் கட்டிடமாக அமைக்க முடிவு செய்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டது .



27/09/2015
சங்கீதமங்கலம் - 27/09/2015 அன்று  உயர்த்தி அமைக்கப்பட்ட பீடத்தில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது .விரைவில் திருக்கோவில் அமையவுள்ளது .
தொடர்புக்கு - திரு.கேசவன் - 9442308460, திருமதி.சுஷீலா -8754486379.








102.ALISOOR

20/09/2015

அளிசூர் - அருள்மிகு அருளானீஸ்வரர் திருக்கோவில் , உத்திரமேரூர்- கனியாம்பூண்டி வழியாக இவ்வூரை அடையலாம்.மேல்கூரையின்  விமானம் சிதிலமடைந்த விழுந்து , சுவாமி வானம்பார்த்து  இருக்கும் நிலையில் இன்று மேற்கூரை அமைத்து வழிபாடு செய்யப்பட்டது .மேலும் திருக்கோவிலில் மேல்தளத்திலுள்ள  மரம் செடி புதர்கள் அகற்றப்பட்டது. திருக்கோவிலின் முன் பகுதியிலுள்ள  புதர்கள் நீக்கப்பட்டது .இத்திருப்பணி செய்த செலவுவகைக்கு ரூ .10000 திரு.விஸ்வநாதர் ஐயா  நம் சிவசபைக்கு  வழங்கியுள்ளார்கள் . 
தொடர்புக்கு- திரு.முனுசாமி - 9942835852.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு





101.SENANGKAARANI

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

06/09/2015
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் ,சென்னங்காரணி -பெரியபாளையம் -தண்டலம் வழியாக இவ்வூரை அடையலாம் .

20/05/2012 
அன்று சுவாமி பிரதிஷ்டை செய்து குடிசையால் கூரை அமைத்தோம்.தற்போது அவ்வூரில் மேற்கூரைக்கான பொருட்களை வாங்கி கொடுத்தார்கள் .இன்று இறைவர்க்கு சிமெண்ட் ஓடுகளால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டது.இத்திருக்கோவிலில் தின பூசை தொடர்ந்து நடந்து வருகிறது ,விரைவில் இக்கூரை சிவாலயமாக மாறவுள்ளது .
தொடர்புக்கு-திரு.வெங்கடேசன் - 9488510027.

திருப்பணிக்குப் பின்பு








100.YENAMBAKKAM

30/08/2015
ஏனம்பாக்கம் -அருள்மிகு ஏகாம்பரேசுவரர்  ,பெரியபாளையத்திலிருந்து 6 கிமீ ல் இவ்வூர் உள்ளது.




22/12/2013
அன்று சுவாமி பிரதிஷ்டை செய்து தென்னங்கீற்று ஓலை கொண்டு குடிசை அமைக்கப்பட்டது .அக்கிராம மக்கள் விரைவில் கோவில் கட்டுவதாக கூறியதால் குடிசை அமைத்தோம் .
30/08/2015
இன்று  வரை திருப்பணி எதுவும் செய்யாததாலும் ,குடிசை சேதம் அடைந்து விட்டதாலும் இன்று மேற்கூரைத் திருப்பணி செய்யப்பட்டது.
தொடர்புக்கு- திரு.முருகன் 9787184472.





99.PERUNAGAR

26/07/2015
பெருநகர்-காஞ்சீபுரத்திலிருந்து  வந்த வாசி செல்லும் பாதையில் மாங்கால் கூட்டுரோடு தாண்டியவுடன் ஆறு ஒன்று வரும் அப்பாலத்தை கடந்தவுடன் வலது பக்கமே வானம்பார்த்து சுவாமி தினபூசையுடன் அருள்பாலிக்கிறார்.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


16/08/2015
பெருநகர்-
அருள்மிகு ஆதி ஆகாசலின்கேஸ்வரர் திருக்கோவில், பாலாற்றங்கரையில் அமைதியான சூழலில் வானம்பார்த்து அருள்பாலித்து வந்த சுவாமிக்கு இன்று மேற்கூரை அமைக்கும் திருப்பணியும் ,குட நன்னீராட்டு விழாவும் நடந்தேறியது.இத்திருப்பணிக்காண செலவு ரூ .15000 திரு.சுரேஷ்ரங்கசாமி  (Phoenix ,USA )அவர்கள் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .மேலும் அடியவன் ஒவ்வொரு கிராமமாக சுவாமியை காண செல்வது வழக்கம்.இக்கிரமதிற்கு போகும் போது முதல் அறிமுகத்திலே இக்கிராம அன்பர் திரு.பண்ணீர்செல்வம் அவர்கள் ரூ .1000 நம் சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள் .

தொடர்புக்கு- திரு .பண்ணீர்செல்வம்  - 9786851125,திரு.சண்முகம் - 9159360222.

திருப்பணிக்குப் பின்பு








98.SIVANOOR

26/07/2015 சிவனூர்-இராணிப்பேட்டை அடுத்து திருவல்லம் பாடல் பெற்றத்திருத்தலம் அருகில் 2 கிமீ இவ்வூர் உள்ளது.


09/08/2015
அருள்மிகு சிவகொழுந்தீசுவரர் திருக்கோவில்  , 
திருவல்லம் ,சிவ .சுகாணந்தம் ஐயா வின் திருக்கூட்டம் சுவாமியை எடுத்து உயர்த்தி பிரதிஷ்டை செய்தார்கள் . தினவழி பாடு சிவனூரில் முன்னால் இராணுவ வீரரும் அவரது மனைவியாரும் சுவாமியிடம் அன்போடு பூசை செய்கிறார்கள் .இவ்வூரை  எங்களுக்கு கூறிய திரு.ஆத்திநாதன் ஸ்தபதி எங்களை இவ்வூர் அருகில் உள்ள காஞ்சன மலைக்கு அழைத்து சென்றார்கள். திருவல்லம் வருகின்ற அடியவர்கள் தவறாது காஞ்சனமாலை சென்றுவாருங்கள் . அன்பர்களின் தொலைபேசி தொடர்புகொண்டு சென்றால் மலைக்கு செல்ல உதவி செய்வார்கள் .திருவருளால் மேற்கூரை திருப்பணி நிறைவு செய்து மிகுந்த மகிழ்ச்சியோடு திரும்பினோம் .
இத்திருப்பணிக்கான செலவு ரூ .15000 திருவருளால் சிவ . பானு  & சரவணன்  அவர்கள் (Phoenix ,USA )அவர்கள் நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார் .
தொடர்புக்கு - சிவ .சுகாணந்தம் -9443099516, சிவ.ஆத்திநாதன் -9750253200,சிவ .கோவிந்தராஜ் (முன்னால் இராணுவவீரர் )-9629301489.