82.THOLUMPEDU

22/02/22015
தொழும்பேடு - செங்கல்பட்டு - திண்டிவனம் மார்க்கத்தில்  இவ்வூர் உள்ளது . பாலம் அடுத்து இடது புறம் வெட்ட வெளியில் சுவாமி அருள்பாலிக்கிறார்.


22.03.2015

தொழுப்பேடு - அருள்மிகு அர்தநாதீசுவரர் திருக்கோவில் , பல வருடமாக இவ்வூர் வழியே சென்றும் சுவாமியை காணாதது  , கண் இருந்தும் குருடனைப்போல் இருந்தேன்.எம் பெருமான் திரு.கண்ணன்ஜி தன்னை வெளிபடுத்தி , சிவம்காட்டி இத்திருப்பணியை நாம் செய்யும் படி அருள் செய்தார் .சிறிய மக்கள் கூட்டம் வந்தாலும் சுவாமி மிக மகிழ்ச்சியை வழங்கினார் .இன்று திருப்பணி நிறைவடைந்து மீண்டும் மாலை 5 மணிக்கே சென்னை திரும்பியது இதுவே முதன் முறையாகும் .
தொடர்புக்கு- சிவ.கார்த்திக்-8015698054.









81.NEERVALUR


01/02/2015
நீர்வள்ளூர் - காஞ்சிபுரதிலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் சின்ன கடை சத்திரம்  சென்று ஆரியம்பாக்கம் அடுத்து இவ்வூர் உள்ளது.சுவாமி குளத்தின் உள்ளே ஆவுடையின்றி சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் .கழிவு நீரை அக்குளத்தில் சேர்கிறார்கள் .

15/03/2015
நீர்வள்ளூர் - அருள்மிகு வராகீசுவரர் திருக்கோவில்
பலகாலம் குளத்தின் உள் சாய்ந்த நிலையில் இருந்து சிவனருளால் இன்று சுவாமி பிரதீஷ்டையும் , நந்திதேவர் மூர்த்ததில் கொம்பு சரி செய்யப்பட்டு , பிரதீஷ்டையும் மேற்கூரையும் இனதே நடைபெற்றது  சிவ.கருணாகரன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரும் திருப்பணிக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.கிராமமக்கள் ஒத்துழைப்போடு மிக சிறப்பாக விழா நடைபெற்றது.ஆரியம்பக்கம் செல்லும் பொது அடியவனுக்கு சுவாமியே தன்னை காட்டி இத்திருப்பணியை செய்து முடித்தார் . இவ்வூரில் பழைய பெயர் ஸ்ரீ பாஷ்யபுரம் .
தொடர்புக்கு-சிவ.கருணாகரன் -9894970943





80.AARIYAMBAKKAM

01/02/2015
ஆரியம்பாக்கம்  - வாலாஜாபாத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் சின்னசத்திரம் சென்று  இவ்வூரை அடையலாம் .மிக பழமையான சிவாலயம் சிதைந்து சுவாமியும்மிக பெரிய நந்தி மூர்த்தமும் வானம்பார்த்து அருள்பாலிக்கின்றனர் .


முன்பு இருந்த நிலையிலுள்ள படம

08/03/2015

ஆரியம்பாக்கம் - சாய்ந்திருந்த சிவலிங்க திருமேனியை குங்கிலிய கலய நாயனாரை மனதில் நினைத்து இத்திருப்பணியை தொடங்கினோம் .இக்கிராமமக்கள் திரளாக வந்து திருத்தொண்டு செய்தார்கள் . கிராம தலைவர் அவர்கள் இன்று முழுவதும் உடனே இருந்து சிறப்பித்தார்கள் . கிரையின் வசதியை இக்கிரமமக்கள் செய்த கொடுத்தனர் .விரைவாக இங்கு திருக்கோவில் அமையவுள்ளது.அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.


i ) திருப்பணிக்குப் பின்பு

i i) திருப்பணிக்குப் பின்பு

iii ) திருப்பணிக்குப் பின்பு

i v) திருப்பணிக்குப் பின்பு









79.ARASANIPALAYAM

01/02/2015
அரசாணிபாலை - காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் திருமாகறல் அடுத்து மின்சார அலுவலகம் சேர்ந்த பாதையில் (காவாந்தண்டலம் செல்லும் வழி எதிரில் உள்ளது )பழைய கோவில் சிதலமடைந்து சுவாமியும் நந்தியையும் , யாரோ நல்லவர் வெளியே எடுத்து வைத்துள்ளார் .


01/03/2015
அரசாணிப்பாலை - அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் , சிவபெருமான் திருக்கருனையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரைத் திருப்பணியும்  இனிதே நடைபெற்றது . இத்திருப்பணிக்கு இக்கிரமமக்கள் திரளாக வந்து திருத்தொண்டு செய்தார்கள் .மேற்கூரை அமைக்கும் செலவினை (Rs .15000) லண்டன் சிவ.வேதநாராயணன் ஐயா அவர்கள் ஏற்றுகொண்டார் .
தொடர்புக்கு- சிவ .விநாயகம்-9865133108.