223.MAMBAKKAM

17/04/2022 மாம்பாக்கம் - அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ,சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரைத் திருப்பணி இனிதே நடைபெற்றது.இத் திருப்பணிக்கு .சிவத்திருமதி.T .R .பத்மாவதி அம்மா அவர்கள் ரூ.30001 வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - திருமதி . முனியம்மாள் - 9843235963

222.VADAKKU PATTU

06/02/2022 வடக்கு பட்டு - அருள்மிகு ஆவுடை நம்பி ஈஸ்வரர் திருக்கோவில்,படப்பை - ஒரகடம் அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரைத் திருப்பணி இனிதே நடைபெற்றது.இத் திருப்பணிக்கு .சிவத்திரு.தங்கம் அவர்கள் ரூ.10000 ,.சிவத்திரு.காசிராம்குமார் அவர்கள் ரூ.10000 வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - திரு .சரவணன் - 9944467870

221.MOONCHURPATTU

22/01/2022 மூஞ்சூர் பட்டு - செய்யாறு அருகில் மூஞ்சூர் பட்டு என்ற கிராமத்தில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரைத் திருப்பணி இனிதே நடைபெற்றது.இத் திருப்பணிக்கு மயிலை‌.சிவத்திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் ரூ.18000 வழங்கி உள்ளார்கள்.அதற்க்கும் மேல் ஏற்பட்ட செலவினை சிவசபை ஏற்றது. கோவில் தொடர்புக்கு - திரு.ஜெகதீஷ் - 9176426545

220. Anaathi Mangalam

08/01/2022 அனாதி மங்களம் - சிவபெருமான் திருவருளால் சேத்துப்பட்டு - செய்யாறு அருகில் அனாதி மங்களம் கிராமத்தில் அருள்மிகு அனாதி மங்களேஸ்வர பெருமான் பிரதிஷ்டை மற்றும் மேற்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.இத்திருப்பனிக்கு திருமதி.T R பத்மாவதி அம்மா அவர்கள் ரூ.30001 நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - திரு.டெண்டுல்கர் - 7305044058

219. VELLORE

26/12/2021 வேலூர் - சிவபெருமான் திருவருளால் இன்று மதுராந்தகம் - சூணாம்பேடு அருகில் உள்ள வேலூர் கிராமத்தில் அருள்மிகு வைத்தீஸ்வர பெருமான் பிரதிஷ்டை மற்றும் மேற்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இத்திருப்பனிக்கு அடியவனின் குருநாதர் துணைவியார் திருமதி.கமலா வேதநாராயணன் அம்மா அவர்கள் ரூ.30000 மற்றும் அவர்கள் நன்பர் திருமதி.ஹேமா சோமசுந்தரம் அவர்கள் ரூ.10000 நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - திரு.சந்தோஷ்- 9360321497

218. ARASARAI KOVIL

24/10/2021 அரசரைக்கோவில்- திருவருளால் அரசரை கோயில் என்ற கிராமத்தில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் பிரதிஷ்டை மற்றும் மேற்கூரை திருப்பணி ஊர்மக்கள் செய்த காலதாமதத்தால் மிகவும் சிரமத்துடன் நடந்தேறியது.கடும் மழையில் நனைந்தபடியே பூசை நடந்தது. செங்கல்பட்டு -படாளம் சக்கரை ஆலை அடுத்து சிறிது தொலைவில் இவ்வூர் உள்ளது . இத்திருப்பணிக்கு திருமதி. தாட்சாயணி அம்மா ரூ.25000 நமது சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 9500507888 , 9585841565

217. SESAMANGALAM

10/10/2021 சீசமங்கலம் - அருள்மிகு மங்களநாதர் திருக்கோவில் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.மேல்மருவத்தூர் முன்பு சோத்தப்பாக்கம் ராமாபுரம் அடுத்து 1கிமீ ட்டலில் இடது புறம் திரும்ப 1 கிமீ ல் இவ்வூர் உள்ளது. இத்திருப்பணிக்கு திருமதி.தாட்சாயணி அம்மா. அவர்கள் ரூ.25000 வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு -திரு. துரை - 9443648577 . மருதாடு சிவ . ராஜேஷ் அவர்கள் தனது குழுவோடு வருகை தந்து பஞ்ச வாத்தியம் செய்தார்கள் (தொடர்புக்கு - 8807763524 )

216.MATHUR

மாத்தூர் -அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.மேல்மருவத்தூர் முன்பு சோத்துப்பாக்கம் வலது பிரிவில் வந்தவாசி செல்லும்வழியில் 5 கிமில் இவ்வூர் உள்ளது.இத் திருப்பணிக்கு அடியவனின் குருநாதர் இலன்டன் சிவத்திரு. வேதநாராயணன் ஐயா அவர்கள் ரூ.25000 வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 9788093791,9500838680

215. NERKUNNAM

05/09/2021 நெற்குணம் கிராமம் - மேல்மருவத்தூர் அடுத்த தொழுப்பேடு என்ற ஊரிலிருந்து இடது புறத்தில் 5 கி மீ ல் இவ்வூர் உள்ளது.அருள்மிகு நற்குண ஈஸ்வரர் திருக்கோவில் மேற்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இத் திருப்பணிக்கு அடியவனின் குருநாதர் இலன்டன் சிவத்திரு. வேதநாராயனன் ஐயா அவர்கள் ரூ.25000 நமது சிவசபைக்கு வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 9787371929

214. SATHANANCHERI

22/08/2021 சாத்தனஞ்சேரி- அருள்மிகு ஆதிபுரிஸ்வரர் திருக்கோவில் , திருவருளால் சாத்தனஞ்சேரி என்ற கிராமத்தில் சுவாமி திருமேனி,நந்தியெம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்க்கூரை அமைக்கப்பட்டது.திருமதி ஹேம மாலினி அவர்கள் இத் திருப்பணிக்காக நமது சிவசபைக்கு ரூ.15000 வழங்கி உள்ளார்கள்.மேலும் ஆன செலவினங்கள் சிவசபை வழி செய்யப்பட்டது.