135.KAMALAPURAM

16/04/2017
கமலாபுரம்-
அருள்மிகு தியானலிங்கேஸ்வரர் திருக்கோவில் , திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 7 கிமீட்டர் தொலைவில் இவ்வூரின் மெயின் ரோட்டின் ஓரத்திலேயே இத்திருக்கோவில் உள்ளது .

 சிவபெருமான் கருணையால் 10/04/2016 அன்று  சுவாமி  பிரதிஷ்டை நடைபெற்றது .16/04/2017 அன்று நந்தியம்  பெருமான் பிரதிஷ்டையும் ,மேற்கூரையும் நடைபெற்றது
நமது சிவசபைக்கு அதற்கான தொகை ரூ .21000 யும் அவ்வூரை சேர்ந்த அன்பர் கேப்டன் சிவ .C .ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு-9566281348,9840262111.




134.SIRUVANCHOOR

 09/04/2017

சிறுவஞ்சூர்
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் , காட்டாங்குளத்தூர் வழி இவ்வூரை  அடையலாம் ,சுவாமி கருணையினால் இன்று மேற்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.இத்திருப்பணிக்கான செலவினை திருமதி.ஹேமாசுகுமாரன் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார் .
தொடர்புக்கு- திரு.மாயன் -9445958314.







131 ,132 & 133 .VELLORE

05/03/2017

வேல்லூர்- ( மணலி -திருவெள்ளவாயில் - வயலூர்- இடது புறம் திரும்பி பின் வலது புறம் திரும்ப இவ்வூர் உள்ளது .

அ ) அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் ,மிக பழமைவாய்ந்த இச்சிவலிங்க திருமேனிக்கு ஆவுடையார் செய்தவர்கள் சரியான அளவு செய்யாததால் பொருந்தாமல் இருந்தது.நம் சிவசபை ஸ்தபதி  வைத்து சரிசெய்து சுவாமி பிரதிஷ்ட்டை இன்று நடந்தேறியது .சுவாமிக்கு மேற்கூரை இக்கிராம மக்கள் அமைத்தனர்.திருப்பணி தொடங்கியுள்ளது .
தொடர்புக்கு- திரு.அசோக்-9944267901.






ஆ ) அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் . பூமியில் பல நூற்றாண்டுகளாக புதைந்திருந்த பச்சை நிற சிவலிங்க திருமேனியை எடுத்து அருகில் வைத்துள்ளோம் . கிராமமக்களை ஆவுடையார் செய்யும் படி பணிந்துள்ளோம்   விரைவில் சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரை பணியும் நடைபெறும்.
தொடர்புக்கு - 9600196662



இ )மண்ணில் படுத்தபடி பாதி புதைந்து நிலையில் இருந்த இச்சிவலிங்கத்தை சுவாமி திருவருளால் நேர் செய்து வைத்துள்ளோம் .









130. ALISOOR

19/02/2017
அழிசூர் -அருள்மிகு வள்ளலீசுவரர் திருக்கோவில்  (உத்திரமேரூரிலிருந்து களியாம்பூண்டி வழியாக இவ்வூரை அடையலாம் )
சிவபெருமான் கருணையால் இன்று ஏரிக்கரை பள்ளத்தில் அருள்பாலித்து வந்த பெருமானை எடுத்து ,பின்பு பள்ளத்தில் மண் கொட்டி உயர்த்தி சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரை பணியும் நடைபெற்றது .
இத்திருப்பணிக்கான தொகையை திருமதி.ஹேமா சுகுமாரன் அவர்கள் வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 8098515704,9976629446.
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு




129. GUNATHOOR

குனாத்தூர்
05/02/2017
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் ,குனாத்தூர் - மகாபலிபுரம் அடுத்து 6 km ல் இவ்வூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு பகுதியில் இப்பதி உள்ளது .இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரையும் திருவருளால் நடைபெற்றது.இத்திருப்பணிக்கான தொகை ரூ.15000 சிவத்திரு.ஸ்ரீதர் அவர்கள் (கோடம்பாக்கம்)நமது சபைக்கு வழங்கியுள்ளார்.
முக்கிய செய்தி :
இங்குள்ள சிவலிங்கத்திருமேனி இதுவரை காணாத வடிவில் ( சிவபெருமானின்   திரு முகங்கள்-   ஈசானம்-வானம் , தற்புருடம்-கிழக்கு , வாமதேவம்-வடக்கு , அகோரம்-தெற்கு , சத்யோ சோதம்-மேற்கு , அதோமுகம்-கீழ்நோக்கிய முகம்  ) ஆறு முகங்களும் லிங்க ரூபமாகவே அமைந்துள்ளது மிக சிறப்பு.
தொடர்புக்கு- திரு.குணா -8248535815


முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு





128.SEEMAVARAM

சீமாவரம்
29/01/2016
அருள்மிகு சோமசுந்தரேஸ்வர் திருக்கோவில்,சீமாவரம் /மீஞ்சூரிலிருந்து 3 km ல் இப்பதி உள்ளது . மிகவும் சிதிலமடைந்து குடிசையின் கீழ் இருந்த நிலையில் இன்று திருவருளால் மேற்கூரை அமைக்கப்பட்டது .இத்திருப்பணிக்கான  செலவினை சிவ.ஹேமசகுமாரன் அவர்கள் நம் சிவசபைக்கு வழங்கியுள்ளார் .
தொடர்புக்கு - 9600000173








127.THENPUTHUPATU

25/12/2016
தென்புதுப்பட்டு - (செஞ்சி -விழுப்புரம் ரோட்டில் 10 கிமீ இவ்வூர் உள்ளது ), அருள்மிகு ஆதிகயிலாசநாதர்,கயிலாசநாதர் திருக்கோவில் .சிவபெருமான் திருவருளால் இன்று இரண்டு சிவலிங்க திருமேனியும் ,அகிலாண்டேஸ்வரி நாமத்துடன் அம்பாள்,நந்தியம்பெருமான் பிரதிஷ்டையும்,மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது.இத்திருப்பணிக்குகாண தொகையை சிவத்திரு.ஷேமசுகுமாறன் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு- 9659634933,9841558849,7010423990.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு





126.VALATHOOR

01/02/2015
வளத்தூர்- காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில் பொன்னேரி கரை வழி பரந்தூர் முன்பு  இவ்வூர் உள்ளது .சுவாமி குளக்கரையில் வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 


27/11/2016

அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோவில், வளத்தூர் .சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதிஷ்டையும்,சொர்ணாம்பிகை  ,நந்தியம் பெருமான் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது.மேற்கூரை திருப்பணியும் திருவேள்வியும் சிறப்பாக நடைபெற்றது.மேற்கூரை பெரிய அளவிலே இவ்வூரை சேர்ந்த சிவத்திரு.அருளானந்தம் அவர்களின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்டது .சுவாமி மிக பெரிய சிவலிங்க திருமேனியாக அருள்பாளிக்கிறார் .

தொடர்புக்கு-  திரு.அருளானந்தம் - 9500005228,திரு.சிவராம ஐயர் - 9952494075 , 9600255915.

திருப்பணிக்குப் பின்பு





125.KEELNELLI

20/11/2016
கீழ்நெல்லி
அருள்மிகு நெல்லீசுவரர்  திருக்கோவில் , காஞ்சிபுரம் - செய்யாறு செல்லும் வழியில் வெண்காடு கூட்டுரோடு வழியே பாடல் பெற்று திருத்தலமாகிய வன்பார்தான் பனங்காட்டூர் வழியே பில்லன்தாங்களில் இடது புறம் திரும்பி 3 km ல் இப்பதி உள்ளது .பழைய கோவில் சிதிலமடைந்து ஒருபெரியவர் 25 ஆண்டிற்கு முன் செங்கல் கொண்டு சுவர் எழுப்பி ஊரில் சிலர் தடுத்ததால் அப்படியே விட்டுவிட்டார்.இன்று திருவருளால் மேற்கூரை அமைத்து வழிபாடு செய்து வந்தோம்.இத்திருப்பணிக்கான செலவினை திருமதி.ஹேமாசுகுமாரன் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார் .கிராம மக்கள் பூசு வேலை செய்து தரை போட்டு திருப்பணி செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள் .