125.KEELNELLI

20/11/2016
கீழ்நெல்லி
அருள்மிகு நெல்லீசுவரர்  திருக்கோவில் , காஞ்சிபுரம் - செய்யாறு செல்லும் வழியில் வெண்காடு கூட்டுரோடு வழியே பாடல் பெற்று திருத்தலமாகிய வன்பார்தான் பனங்காட்டூர் வழியே பில்லன்தாங்களில் இடது புறம் திரும்பி 3 km ல் இப்பதி உள்ளது .பழைய கோவில் சிதிலமடைந்து ஒருபெரியவர் 25 ஆண்டிற்கு முன் செங்கல் கொண்டு சுவர் எழுப்பி ஊரில் சிலர் தடுத்ததால் அப்படியே விட்டுவிட்டார்.இன்று திருவருளால் மேற்கூரை அமைத்து வழிபாடு செய்து வந்தோம்.இத்திருப்பணிக்கான செலவினை திருமதி.ஹேமாசுகுமாரன் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார் .கிராம மக்கள் பூசு வேலை செய்து தரை போட்டு திருப்பணி செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள் .










124.SIRUMAIYILOOR

06/11/2016
சிறுமயிலூர்-
அருள்மிகு சிறு மயிலீசுவரர் திருக்கோவில் , சிறுமயிலூர் -செங்கல்பட்டு -பழைய சீவரம் -திருமுக்கூடல்-நெல்வாய் ரோட்டில் 6 கீமி ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,திரிபுரசுந்தரி அம்மை,கணபதி,முருகன்,நந்தியம் பெருமான் ,சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மேற்கூரை திருப்பணியும் திருவேள்வியும் சிறப்பாக நடைபெற்றது.மேற்கூரை செலவினை நமது சிவசபை அன்பர் திருமதி .ஹேமலதா சுகுமாறன் அவர்கள் நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு-8870196961, 7810061883 ,8760233195

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு





123.SEMBOOR

23/10/2016
செம்பூர் - அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர்  திருக்கோவில், மதுராந்தகம் -பவுன்ச்சூர் -அணைக்கட்டு  வழியே  இடது பிரிவில் 2 km ல் இவ்வூர்  உள்ளது.இன்று சுவாமி திருவருளால் மேற்கூரை திருப்பணி நடை பெற்றது.இத்திருப்பணிக்காக நமது சிவசபைக்கு அஸ்தினாபுரம் , சிவ.திரு.S .முரளிதரன்  அவர்கள் ரூ.15000 வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு - திரு.ஏழுமலை - 9943539671,திரு .சம்பத்- 9655962517.


முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு





122.KALPATTU


09/10/2016

கல்பட்டு - அருள்மிகு சுந்தரேஸ்வரர்  திருக்கோவில், செங்குன்றம் - தாமரைப்பாக்கம் - வெங்கல் -சீதனசேரி வழியே  4 km ல் வலதுபுறம் திரும்பி 4 km ல் இவ்வூர்  உள்ளது.இன்று சுவாமி திருவருளால் மேற்கூரை திருப்பணி நடை பெற்றது.இத்திருப்பணிக்காக நமது சிவசபைக்கு சென்னை  , சிவ.திரு.முரளிதரன்  அவர்கள் ரூ.15000 வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு - செல்வி.ஜானகி -8148586364,திரு.அர்ஜுனன் -8489375209.







121.APPUPATTU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம
25/09/2016

அப்புப்பட்டு- அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் 19 km ல் இவ்வூர் உள்ளது.இன்று சுவாமி திருவருளால் மேற்கூரை திருப்பணி நடை பெற்றது.இத்திருப்பணிக்காக நமது சிவசபைக்கு கோயம்பத்தூர் , சிவ.திரு.சுந்தரராஜன் அவர்கள் ரூ.20000 வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு - கலியவரதன் - 9655396569.


திருப்பணிக்குப் பின்பு





120.AANAIPALLAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


04/09/2016

ஆணைப்பள்ளம் - அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ,உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 3 கிலோமீட்டர் தொலைவில் சாலை ஓரத்திலே இப்பதி உள்ளது . இன்று சுவாமி கருணையினால் மேற்கூரையும் ,பிரதிஷ்டையும் நடைபெற்றது .இத்திருப்பணிக்காக ரூ.15000 சிவ.S . சுவாமிநாதன் அவர்கள் நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார் .
தொடர்புக்கு- 9444087762.

திருப்பணிக்குப் பின்பு







119.KUNNAVAKKAM

10/7/2016
குன்னவாக்கம் - அருள்மிகு பிரகதீசுவரர்  திருக்கோவில்,புக்கத்துறையிலிருந்து ,உத்திரமேரூர் செல்லும் வழியில் நெல்வாய் கூட்டுரோட்டிலிருந்து 5 km ல் இவ்வூர் உள்ளது .திருவருளால் மேற்கூரை அமைத்து ,வழிபாடு இனிதே தொடங்கியது.

தொடர்புக்கு-திரு.ஹரி - 9159921287,9443375339 , திரு. கார்த்திக் - 9047240069









86 (B) .KUTHAVAKKAM

03/07/2016

கூத்தவாக்கம்-அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில்
  காஞ்சிபுரம் செல்லும் வழி , சின்னயன் சத்திரம் வலது பிரிவில் 3 கி.மீ  இல் ஊர் உள்ளது  
 திருவருளால் நமது சிவசபை மேற்கூரை அமைத்து வந்த இறைவர்க்கு இவ்ஊரைச் சேர்ந்த சிவ.திலகவதி நடராஜன் அம்மா அவர்கள், கிராம மக்களின் ஒத்துழைப்புடனும் , கோவை கற்பகம் பல்கலைக்கழகம் இ.ர . வசந்த குமார் ஐயா, சிவ.பரத் ஐயா மற்றும் அணைத்து சிவ அன்பர்களின் ஒத்துழைப்புடன் திருப்பணி செய்தி திரு குடநன்னிராட்டு விழா இனிதே நடைபெற்றது . இத் திருக்கோயிலுக்கு நமது சிவசபை அமைப்பாளர் சிவ.கபாலி நேசன் ஐயா வண்ணப்பூச்சு வாங்கி அதனை பூசும் செலவையும் ஏற்றுக்கொண்டார்கள் இத் திருக்கோயில்   குடநன்னிராட்டு விழாவில் தலைமை கலசம் உள்ளிட்ட ஆறு கலசத்தையும் பெண்கள் எடுத்தது கூறிபிடத்தக்கது.


தொடர்புக்கு : சிவ.திலகவதி நடராஜன்  8056001365








73 (B) .MATHURAMUKKAERI

26/06/2016
மதுரா முறுக்கேரி 

அருள்மிகு முருகுநாதேசுவரர் திருக்கோவில்  , உத்திரமேரூரிலிருந்து 10 கி.மீ

திருவருளால் இன்று மேற்குறையிலிருந்து சுவாமி திருக்கோயிலின் உள் பிரதிஷ்டை செய்து குடநன்னீராட்டும் நடைபெற்றது

தொடர்புக்கு : சிவ.முத்தரசு  9865133899