117.SIRUMAEYILOOR



08/05/2016
சிறுமையிலூர் -  அருள்மிகு கபாலீஸ்வரர்  திருக்கோவில் , அச்சிறுப்பாக்கதில் இடதுபுறம் முருகன் கோவில் வளைவிலிருந்து 10km  உள்ளே  சென்றால் இவ்வூரை அடையலாம்  . ஆலமரத்தின்கீழ் சுவாமி அருள்பாலித்துவந்தார் . நந்திதேவர் மூர்த்தம் பழுது பட்டிருந்தது .ஸ்தபதியை வரச்செய்து சரிசெய்து திருவருளால் சுவாமி பிரதிஷ்டையும் , நந்திதேவர் பிரதிஷ்டையும் செய்து , மேற்கூரை அமைத்து வழிபாடு இனிதே தொடங்கியது . இந்த மேற்கூரைக்கான செலவு தொகையான Rs .15000 லண்டன் சிவத்திரு .வேதநாராயணன் ஐயா  அவர்கள் வழங்கி உள்ளார்கள் . மேலும் கிராம மக்கள் மிகுந்த ஈடுபாடோடு இருக்கிறார்கள் .
தொடர்புக்கு - திரு .ஜெயச்சந்திரன் - 9952350975.

திருப்பணிக்குப் பின்பு








116.ARUNGUNAM

24/04/2016
அருங்குணம் -அருள்மிகு அருனீசுவரர் திருக்கோவில் - மதுரந்தகத்திலிருந்து  4 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.திருவருளால் இன்று மேற்கூரை அமைக்கும் திருப்பணி நடைபெற்றது.திரு.கண்ணன் ஜி கழிவுநீரிலிருந்த சிவலிங்கத்திருமேனியை எடுத்து இடமில்லாமல் விநாயகர் கோவில் முன்பு பிரதிஷ்டை செய்துள்ளார் .அவரின் பணி பாராட்டு குரியது .சிவ.திரு.N .வைத்தீஸ்வரன் அவர்கள் இம்மேற்கூரை அமைத்த திருப்பணிக்கான ரூ .15000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு-சிவ . கண்ணன் ஜி -9841026857 ,சிவ.யுவராஜ்-9944143632.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு





115.KAMALAPURAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

10/04/2016
கமலாபுரம்-
அருள்மிகு தியானலிங்கேஸ்வரர் திருக்கோவில் , திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 7 கிமீட்டர் தொலைவில் இவ்வூரின் மெயின் ரோட்டின் ஓரத்திலேயே இத்திருக்கோவில் உள்ளது .
பலகாலம் சாய்ந்து மண்ணில் புதைந்து நிலையில் இருந்து மிகப்பெரிய சிவலிங்கத்திருமேனி ,சிவபெருமான் திருக்கருனையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும்,மேற்கூரைத்திருப்பணியும்  நடைபெற்றது .இத்திப்பணிக்கு தனது சொந்த இடத்தை வழங்கியும் ,தேவையான செங்கல்,மணல்.சிமெண்ட் கட்டுமான வேலையாட்கள் போன்ற அத்தனை செலவுகள் மற்றும் மேற்கூரை அமைத்து நமது சிவசபைக்கு அதற்கான முழுத்தொகை ரூ .30300 யும் அவ்வூரை சேர்ந்த அன்பர் கேப்டன் சிவ .C .ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு-9566281348,9840262111.


திருப்பணிக்குப் பின்பு





114.SOLANOOR

03/04/2016
சோழனூர் - அருள்மிகு ஆனந்தபுரிஸ்வரர் , சிவபெருமான் திருவருளால் ஊருக்கு ஒதுக்கு புறமாக 2 km  தொலைவில் கிராம தேவதை அருகில் இருந்த சிவலிங்க திருமேனியை எடுத்து ஊருக்குள் உள்ள விநாயகர் கோவிலின்  உள் சுவாமி பிரதிஷ்டை செய்து மேற்கூரை அமைக்கப்பட்டது .
தொடர்புக்கு-திரு.ஏழுமலை ( சோழனூர்)- 7708385991

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு





113. NELLI

06/03/2016

நெல்லி -  அருள்மிகு நெல்லிசுவரர் ,உத்திரமேரூர் 9 கிமீ தொலைவில் எல்.எண்டத்தூர் செல்லும் வழியில் இடது புரம் திரும்பி 1 கிமீ இவ்வூர் உள்ளது . அருள்மிகு நெல்லீசுவரர் திருக்கோவில்.
இன்று சிவபெருமான் கருணையினால் சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது . சிவ.சந்திரசேகர் ஐயா ( Everest  coffee ,Chennai )இத்திருப்பணிக்கு ரூ .15000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- சிவ.ஜெயபால் - 9843005080.







112. KUPPAKKALMAEDU

குப்பக்கல்மேடு -
28/02/2016
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோவில் - சென்னையிலிருந்து காஞ்சிபுரம்-வெள்ளகேட்டு வலது பிரிந்து திருமாற்பேறு -சேர்ந்தமங்களம் -இடது பிரிவின் வழி நெமிலி சென்று பானாவரம் முன்பு உள்ள மலையின்மேல் சுவாமி அருள்பாலிக்கிறார் இன்று திருவருளால் நம்பெருமானுக்கு மேற்கூரை திருப்பணி செய்து வழிபாடு நடந்தேறியது.இத்திருப்பணிக்கு சிவத்திரு .கவிதா நாகராஜன் அவர்கள் ரூ.15000 வழங்கி உள்ளார்கள் .
தொடர்புக்கு- 9442973952


குறிப்பு-கூத்தவாக்கம் சிவாலயத்திருப்பணிக்கு கருங்கல் வேண்டி சோளிங்கர் செல்ல திட்ட மிட்டோம் அதன்படி செல்லும் போது திருவருளால் சிவ.சதாசிவம் ஐயாவின் கண்களுக்கு இம்மலை பார்வையில் பட இங்கு கல் வாங்கலாம் என்று நுழைந்தோம் அப்போது தான் சுவாமியை மலை மீது கண்டோம் பெருகிய ஆனந்தத்திற்கு அளவே கிடையாது .இவ்வூர் மக்கள்ளிடம் பேசி இரண்டு வார்த்தையிலே மேற்கூரை திருவருளால் அமைக்கப்பெற்றது . இங்குள்ள அமைதியும் ,தூய காற்றும்  நமக்கு மிகுந்த ஆனந்தத்தை தருகிறது.







111.MATHURANTHAGAM

14/02/2016
மதுராந்தகம்-அருள்மிகு வடதிருசிற்றம்பலநாதர் ,அமிர்தகடேசுவரர் திருக்கோவில் -சென்னையிலிருந்து மதுராந்தகம் ஊருக்குள் நுழையும் வழியில் முருகன் சன்னதி தெரு வழி சென்று வலது புரம் திரும்ப குளக்கரையில் சுவாமி அருள்பாலிக்கிறார் .இன்று திருவருளால் சுவாமி பிரதீஷ்டையும் ,மேற்கூரைத் திருப்பணியும் ,வேத வேள்வியும் சிறப்பாக நடைபெற்றது.இத்திருப்பணிக்கு நமது சிவசபை அன்பர் திரு.ஜெ .நாகலிங்கம் அவர்கள் ரூ . 15000 வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு-சிவ.செந்தில் - 8939855205.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு






109 & 110 .VELLAYAMPATU


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
07/02/2016
வெள்ளயம்பட்டு -  செஞ்சி -அனந்தபுரம்  வழியாக இவ்வூரை அடையலாம் .அருள்மிகு நந்தீசுவரர்  , அருள்மிகு பெருவுடைநாதர் . நந்தியம்பெருமான் பிரதிஷ்டையும்,   10 அடிக்கு 20 அடி நீளமுள்ள மேற்கூரையும்  அமைத்து சிவவேள்வி செய்து வந்தோம் . இக்கிராமமக்கள் நம் சிவசபைக்கு Rs .15000 வழங்கினார்கள் .

தொடர்புக்கு- சிவ.புகழேந்தி - 9043340668 ,சிவ.ரவி- 9943109875.


திருப்பணிக்குப் பின்பு





108.ALTHARAI

28/09/2014

அல்த்தரை - உத்திரமேரூர் - வெங்கோடு -இரும்பேடு வழியே 12 கீமி ல் இவ்வூரை அடையலாம் .திருக்கோவில் சிதலமடைந்தும், கருவறை முழுவதும் விழுந்து விட்டது .சுவாமி மிக அழகுடன் திகழ்கிறார் .


03/01/2016
அல்த்தரை -அருள்மிகு மாசிலாமணிசுவரர் திருக்கோவில் .
சிவபெருமான் கருணையால் இத்திருகோவிலில் ஈசான்ய பகுதியில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது.சுவாமிக்கு மேற்கூரை கிராம மக்கள் அமைத்தார்கள் .
தொடர்புக்கு -9962386882.