111.MATHURANTHAGAM

14/02/2016
மதுராந்தகம்-அருள்மிகு வடதிருசிற்றம்பலநாதர் ,அமிர்தகடேசுவரர் திருக்கோவில் -சென்னையிலிருந்து மதுராந்தகம் ஊருக்குள் நுழையும் வழியில் முருகன் சன்னதி தெரு வழி சென்று வலது புரம் திரும்ப குளக்கரையில் சுவாமி அருள்பாலிக்கிறார் .இன்று திருவருளால் சுவாமி பிரதீஷ்டையும் ,மேற்கூரைத் திருப்பணியும் ,வேத வேள்வியும் சிறப்பாக நடைபெற்றது.இத்திருப்பணிக்கு நமது சிவசபை அன்பர் திரு.ஜெ .நாகலிங்கம் அவர்கள் ரூ . 15000 வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு-சிவ.செந்தில் - 8939855205.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு






109 & 110 .VELLAYAMPATU


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
07/02/2016
வெள்ளயம்பட்டு -  செஞ்சி -அனந்தபுரம்  வழியாக இவ்வூரை அடையலாம் .அருள்மிகு நந்தீசுவரர்  , அருள்மிகு பெருவுடைநாதர் . நந்தியம்பெருமான் பிரதிஷ்டையும்,   10 அடிக்கு 20 அடி நீளமுள்ள மேற்கூரையும்  அமைத்து சிவவேள்வி செய்து வந்தோம் . இக்கிராமமக்கள் நம் சிவசபைக்கு Rs .15000 வழங்கினார்கள் .

தொடர்புக்கு- சிவ.புகழேந்தி - 9043340668 ,சிவ.ரவி- 9943109875.


திருப்பணிக்குப் பின்பு





108.ALTHARAI

28/09/2014

அல்த்தரை - உத்திரமேரூர் - வெங்கோடு -இரும்பேடு வழியே 12 கீமி ல் இவ்வூரை அடையலாம் .திருக்கோவில் சிதலமடைந்தும், கருவறை முழுவதும் விழுந்து விட்டது .சுவாமி மிக அழகுடன் திகழ்கிறார் .


03/01/2016
அல்த்தரை -அருள்மிகு மாசிலாமணிசுவரர் திருக்கோவில் .
சிவபெருமான் கருணையால் இத்திருகோவிலில் ஈசான்ய பகுதியில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது.சுவாமிக்கு மேற்கூரை கிராம மக்கள் அமைத்தார்கள் .
தொடர்புக்கு -9962386882.







107.VENBAKKAM

06/12/2015
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் ,வெண்பாக்கம் ( திருமாற்பேறு என்ற  பாடல்பெற்றத்  திருத்தலம் அருகில் உள்ள கிராமம் )
திருமாற்பேறு அடியார் சிவ.வஜரவேல் ஐயா  தொலைபேசியில் சுவாமிக்கு மேற்கூரை அமைத்து தரும்படி அழைத்தார் .சுவாமிக்கு மேற்கூரை அமைக்க சென்றோம் ஆனால் திருவருளால் திருக்கோவில் திருப்பணி நிறைவுற்று  இன்று திருகுட நன்னீராட்டு விழா சிறப்பாக நடந்ததேரியது ..நம் சிவசபை அன்பர்கள் திரு.கபாலிநேசன் ஐயா ( வண்ணப்பூசு  வேலையும் ),  கோயம்பத்தூர் சிவ.வசந்தகுமார் ஐயா  ரூ.25000,சிவ.பாரத்கணேசன் ஐயா 10000 செங்கல் வழங்கியுள்ளர்கள் .
 மேலும் நம் சபைசார்பாக நந்தியம் பெருமானுக்கு மேற்கூரை அமைத்துள்ளான் . மேற்கோண்ட ஆன செலவுகளை இக்கிராமமக்களும் ,அடியார் பெருமக்களும் ஏற்றுகொண்டனார் . ஸ்தபதி திரு.ஆதிநாதன்  அவர்கள் மிக குறைந்த தொகையை பெற்றுக்கொண்டு திருப்பணியை நிறைவு செய்து கொடுத்தார் .

தொடர்புக்கு- திரு.வஜ்ரவேல்-9894920411











106.PERUVAELVI

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
25/10/2015
பெருவேலி -அருள்மிகு காளத்தீசுவரர் ,மதுராந்தகம் -சித்தாமூர் வழியாக இவ்வூரை அடையலாம் .சிவபெருமான் கருணையால் மேற்கூரைத் திருப்பணியும்,திருவேள்வியும் நடைபெற்றது .
தொடர்புக்கு-திரு.பார்த்திபன் - 9787909427,திரு.பிரபு -9843669689.

திருப்பணிக்குப் பின்பு





105.KOLATHUR


25/10/2015
கொளத்தூர்-அருள்மிகு ரத்தனகிரீசுவரர் ,மதுராந்தகம் -சித்தாமூர் ரோடுகடை  வழியாக சிறியமலை உள்ளது அம்மலைமேல் சுவாமிக்கு மேற்கூரை இன்று அமைக்கப்பட்டது.இத்திருப்பணிக்கு திருமதி.ரமணா ரச்சகொண்டா சியாமளா அம்மா ரூ .5000 வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு-திரு.சண்முகம்-8870802450,திரு.கமலக்கண்ணன் -9524882663


104.KONDANGKARAI

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

04/10/2015
அருள்மிகு கச்சபேசுவரர் திருக்கோவில் ,கொண்டங்கரை (காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோனம் செல்லும் வழியில் சேந்தமங்கலம் இடது பிரிவில் நெமிலி வழியே இவ்வூரை அடையலாம் .இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரை அமைத்து வேள்வியும் நடைபெற்றது இத்திருப்பணிக்காண செலவு ரூ .15000 திருமதி.சரஸ்வதி பரமசிவம் அவர்கள் நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு-திரு.நடராஜன்-9786168584


திருப்பணிக்குப் பின்பு





103.SANGEETHAMANGALAM

23/08/2015
சங்கீதமங்கலம் - அருள்மிகு சங்கீதமங்கலேசுவரர் திருக்கோவில் ,சிவபெருமான் கருணையினால் 23/08/2015 அன்று சிவலிங்க திருமேனியை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைது , சுவாமி இருந்த அதே இடத்தில் உயர்த்தி ,செங்கல் கட்டிடமாக அமைக்க முடிவு செய்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டது .



27/09/2015
சங்கீதமங்கலம் - 27/09/2015 அன்று  உயர்த்தி அமைக்கப்பட்ட பீடத்தில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது .விரைவில் திருக்கோவில் அமையவுள்ளது .
தொடர்புக்கு - திரு.கேசவன் - 9442308460, திருமதி.சுஷீலா -8754486379.








102.ALISOOR

20/09/2015

அளிசூர் - அருள்மிகு அருளானீஸ்வரர் திருக்கோவில் , உத்திரமேரூர்- கனியாம்பூண்டி வழியாக இவ்வூரை அடையலாம்.மேல்கூரையின்  விமானம் சிதிலமடைந்த விழுந்து , சுவாமி வானம்பார்த்து  இருக்கும் நிலையில் இன்று மேற்கூரை அமைத்து வழிபாடு செய்யப்பட்டது .மேலும் திருக்கோவிலில் மேல்தளத்திலுள்ள  மரம் செடி புதர்கள் அகற்றப்பட்டது. திருக்கோவிலின் முன் பகுதியிலுள்ள  புதர்கள் நீக்கப்பட்டது .இத்திருப்பணி செய்த செலவுவகைக்கு ரூ .10000 திரு.விஸ்வநாதர் ஐயா  நம் சிவசபைக்கு  வழங்கியுள்ளார்கள் . 
தொடர்புக்கு- திரு.முனுசாமி - 9942835852.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு