95.RAGUNANTHAPURAM

9th,October,2011
ரகுநாதபுரம் லிங்ககுட்டை -
மாங்காடுலிருந்து நசரத்பேட்டை செல்லும் வழியில் ரகுநாதபுரம் குளத்தின் உள் பெரிய சிவலிங்க திருமேனி உள்ளது . மழை காலத்தில் குளத்தின் நீர் சூழ்ந்து விடுகிறது அதனால் காலைகடன் செய்யும் அசுத்தமான இடத்தில இறைவன் அருள்பாலிக்கிறார் .




12 /08 /2012
சிவலிங்க திருமேனியை எடுத்து உயர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது .விரைவில் ஆவுடையார் பொருத்தி மேற்கூரை அமைக்கப்படும் .



28/06/52015

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் - 12/08/2012 அன்று எடுத்து பிரதிஷ்டை செய்து சிவலிங்கத் திருமேனிக்கு சிவபெருமான் திருவருளால் இன்று ஆவுடையார் பொருத்தப்பட்டு திருமுறை வேள்வி செய்து குட நண்ணீராட்டு விழா இனிதே நடைபெற்றது.
தொடர்புக்கு- 9840551440.







94.VEANBAKKAM

14/06/2015
வேண்பாக்கம்-ஒரகடம் -பண்ருட்டி - இடது பிரிவில் 1 km  இவ்வூர் உள்ளது .
அருள்மிகு நல்லிணக்கேஸ்வரர் திருக்கோவில்
சுவாமி திருவருளால் மேற்கூரைத்திருப்பணியும் , திருவேள்வியும் நடைபெற்றது .சிறப்பான வழிபாடு நடந்தேறியது .இங்கு நடைபெற்ற  மேற்கூரை திருப்பணிக்கான செலவு   Rs .15000 சிவத்திரு.பரத் அவர்கள்   நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு - திரு.சசி-9940209318 , திரு.பரத்-9962510138.










93.KEEL THANJAI

06/06/2015
கீழ் தஞ்சாவூர் - மயிலாடுதுறை -திருப்புகலூர் எதிரிலுள்ள ரோட்டில் சென்று திருச்செங்காட்டு  வழியே 4 km  இவ்வூர்வுள்ளது . பல நூற்றாண்டாக மண்ணில் புதைந்திருந்த ஐந்து பொக்கிஷத்தை , விலைமதிக்கமுடியாத மாணிக்கத்தை இப்படியா போடுவது .அதுவும் அறுபத்து  மூன்று நாயன்மார்களில் செருந்துனை நாயனார் பிறந்த ஊர்  ஆகும் .இவ்வூரில் திருமூலநாதர் சிவாலயம் ஒன்று உள்ளது .அத்திருகோவில் செருந்துனை நாயனாரின் திருமூர்த்தம் வைக்கப்படுள்ளது .  

இவ்வூரில் நத்தம் மேடு என்ற இடத்தில்  ஐந்து சிவலிங்கத்திருமேனிகளும் அருள்பாலித்து வந்தனர் .அதில் அனைவரையும்  கவரும் வகையில் 32 பட்டை கொண்ட சிவலிங்கத்திருமேனியும் ஒன்று .மிக அழகுவாய்ந்த இவ்ஐந்து  சிவலிங்கத்திருமேனிக்கும்   இன்று ஒரே நாளில் பிரதிஷ்டையும் ,மேற்கூரை திருப்பணியும்  நடைபெற்றது.மறுநாள் 07/06/2015 அன்று திருகுட நன்னீராட்டு விழா  நடைபெற்றது.பெருந்திரளாக அக்கிராமமக்கள் கூடிவந்தனர் .குறிப்பாக இவ்வூர் கிராமத்தலைவர் மிகவும் ஒத்துழைப்பு தந்தார்கள் .செங்கல் , சிமெண்ட் ஆகிய பொருட்களை திரு.இராதா கிருஷ்ணன் அவர்கள் கொடுத்து உதவினார்கள் , தரை போடும் செலவினை திரு.ஆறுமுகம் அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளார் . இத்திருப்பணி மேற்கூரை அமைத்த செலவினை நமது (கோச்செங்கண்ணாயனார்சிவத்தொண்டு சிவசபைஅமைப்பாளர்) சிவ.திரு.கபாலிநேசன் ஐயா சிவசபைக்கு வழங்கினார் .

தொடர்புக்கு-சிவ . செல்லையன்-9626392775

அ )அருள்மிகு தர்மேஸ்வரர் 





 ஆ )அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர்



இ )அருள்மிகு பீமேசுவர்






ஈ )அருள்மிகு நகுலேஸ்வரர் 








 உ)அருள்மிகு சகாதேவேசுவரர் 






 திருகுட நன்னீராட்டு விழா



92.AARIYAMBAKKAM

31/05/2015
ஆரியம்பாக்கம் - இக்கிராமத்தில் இதற்கு முன்பு நமது சிவசபை அருள்மிகு ஆரியகும்பேசுவரர் திருக்கோவில் திருவருளால் அமைத்திருந்தது. அதே ஊரில் ஏரிக்கு உள்ளே வெட்ட வெளியில் அருள்பாலித்து வந்த மற்றொரு சிவலிங்கத்திருமேனியை இன்று ஏரிக்கு வெளியே எடுத்து வந்து மேற்கூரை அமைத்து வழிபாடு செய்தோம் .
தொடர்புக்கு-சிவ .பாலு-9095436456, சிவ.இராஜேந்தரன் -9994873154.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு





87,88,89,90 & 91.AARIYAMBAKKAM

ஆரியம்பாக்கம்
17/05/2015
அருள்மிகு ஆரியகும்பகேஸ்வரர் திருக்கோவில் 
சுவாமி திருவருளால் மேற்கூரைத்திருப்பணியும் , திருவேள்வியும் நடைபெற்றது .சிறப்பான வழிபாடு நடந்தேறியது இக்கிரமமக்கள் நந்தியம் பெருமானுக்கு அமைத்த மேற்கூரைக்கு Rs .15000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர் .
தொடர்புக்கு - திரு.ராஜேந்திரன்-9994873154 , திரு.பாலு- 9095436456





86. KOOTHAVAKKAM

29/03/2015
கூத்தவாக்கம் - சுங்குவா சத்திரம் அடுத்து சின்னக்கடை சத்திரத்திலிருந்து 5 கீமி ல் இவ்வூர் உள்ளது .சுவாமி மிக அழகு .மேற்கூரை அமைக்க முயற்சி செய்கிறோம் .
தொடர்புக்கு-9840302840.



முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


10/05/2015
கூத்தவாக்கம் - அருள்மிகு திருச்சிற்றம்பல நாதர் திருக்கோவில்
என்ன புண்ணியம் செய்தோமோ எம் பெருமானை தீண்டும் வைப்பை இன்று இறைவன் அருளிச் செய்ததற்கு .சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் , திருகுட நன்னீராட்டு விழாவும் இனிதே நடைபெற்றது.
தொடர்புக்கு- சிவ .திலகவதி  நடராஜன்-9840302840.
திருப்பணிக்குப் பின்பு






85.PAPANALUR

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

01/05/2015
 பாபநல்லூர் - வேடந்தாங்கல்லிருந்து 4 கீமி ல் இவ்வூர் உள்ளது .
அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோவில்,
சிவலிங்கத்திருமேனி  மேல் பாகம் முழுவதும் சிதைந்ததால் புதிய திருமேனி பழைய ஆவுடையாரில் பொருத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது .பழைய திருமேனி சண்டேசுவரர் மிக பெரிய நந்திதேவர் திருமேனிகள் இக்கூரையின் உள்ளே பிரதிஷ்டை செய்து 10*20 அடி மேற்கூரை போடப்பட்டது.இக்கிராமமக்கள் ரூ .8000 மேற்கூரைக்காக வழங்கினார்கள்.

தொடர்புக்கு-திரு.வீரமணி -8220476229.


திருப்பணிக்குப் பின்பு