67.NELVAI

20/07/2014
நெல்வாய் -செங்கல்பட்டு -புக்கதுறை - ஊத்திரமேரூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .சுவாமி கூரையின் கீழ் அருள்பாலிக்கிறார் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

24/08/2014
நெல்வாய் - அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் சிவபெருமான் திருவருளால் சுவாமிக்கு பிரத்திஷ்டையும் , மேற்கூரையும் இனிதே நிறைவேறியது .
தொடர்புக்கு- திரு .சங்கர் -8754842351 , திரு .விக்னேஷ் -9597034984.


i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v

61, 62 ,63 ,64, 65 & 66 .AGALANGKAN

15/08/2014
அகழங்கன்- பாண்டிச்சேரி மாவட்டம் , திருநள்ளாறு வழி செல்லூர் ஊரிலிருந்து இடதுபுற பிரிவில் 3 km  இவ்வூர் உள்ளது.15/08/2014 அன்று வயல் வெளியிலும் மண்ணில் புதைந்தும் , சாய்ந்துமிருந்த 6 சிவலிங்க திருமேனியை சிவபெருமான் கருணையினால் எடுத்து அவ்வூரில் உள்ள அருள்மிகு வைதீசுவரர் திருக்கோவில் உள்ளே வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு , 10அடிக்கு 40 அடி மேற்கூறை அமைக்கப்பட்டது .இத்திருப்பணிக்கு 57000 ரூபாய் செலவானது . இச்செலவில் ரூ.1000 திரு.மகேந்திரன் (திருவல்லிக்கேணி) அவர்களும் , ரூ.5000 திரு.முத்தையன் (s/o திரு.M.ராமசுவாமி,அகழங்கன்) அவர்களும் , மீதம் ரூ .51000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை அமைப்பாளர் சிவ .கபாலிநேசன் ஐயா அவர்கள் வழங்கியுள்ளார்கள் . இத்திருப்பணி ஒரேநாளில் திருவருளால் நடைபெற்றது .

அ) அருணாச்சலேசுவரர்

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


ஆ) காசிவிஸ்வநாதர்

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



இ) அமிர்தகடேஸ்வரர்
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



 ஈ) சுந்தரேசுவரர்

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



 உ) ராமநாதசுவாமி
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


ஊ )ஏகாம்பரேஸ்வரர்
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



திருப்பணிக்குப் பின்பு :






60. VEERABOAGAM



முன்பு இருந்த நிலையிலுள்ள படம் - 08/07/2014

03/08/2014
வீரபோகம்-செய்யூர் - கூவத்தூர் ரோடு ஆலமரம் பிரிவில் இவ்வூர் உள்ளது.
அருள்மிகு வீரவசந்தவராய ஈஸ்வரர் திருக்கோவில் , .சிவபெருமான் திருவருளால் பிரதிஷ்டையும் மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது .

தொடர்புக்கு - திரு.அங்கமுத்து -9787476002 , திரு.முத்து -9843695519.




i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii )


iv )

v )


59.SIRUTHAAMOR

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

27/07/2014
சிறுதாமூர் -அருள்மிகு மணிகண்டேசுவரர் திருக்கோவில் , செங்கல்பட்டு -பழையசீவரம் -பட்டா  வழியாக இவ்வூரை அடையலாம் .திருக்கோவில் சிதலமடைந்து சுவாமியை வெளியெடுத்து  வைத்திருந்தார்கள் .சிவபெருமான் திருவருளால் பிரதிஷ்டையும் மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது .
தொடர்புக்கு -சிவ .கோவிந்தராஜ் -9047884345.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii )

iv )

v )


58.AARKADU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
13/07/2014
ஆற்காடு -
அருள்மிகு ஆதி அண்ணாமலையார் திருக்கோவில்  , விழுப்புரம் ஊருக்குள் பழைய பேருந்து நிலையம் செல்லும் பாதைக்கு நேர் எதிரில் திருக்கோவிலூர் செல்லும் பாதையில் 20 km ல் ஆயத்தூர் ஊரிலிருந்து 5 km ல் இவ்வூர் உள்ளது.சிவபெருமான் திருவருளால் மிகப் பெரிய சிவலிங்கத்திருமேனி , நந்தியம் பெருமான் பிரதிஷ்டையும் , மேற்கூரை பணியும் இனிதே நடந்தேறியது .இத்திருப்பணிக்கு மாங்காடு திரு.கஜபதி அவர்கள் ரூ . 15000 வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு - திரு .சண்முகம் -9787739465.


i ) திருப்பணிக்குப் பின்பு

ii )


iii)









57.SIRUVANGUNAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

08/06/2014
சிறுவங்குணம் - அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் .இத்திருப்பணி நமது சிவசபைக்கு எம்பெருமான் கொடுத்த அருட்கொடையாகும் .சுவாமியின் அழகை வார்த்தைகளால் கூற இயலாது .நம்முடைய நெற்றி புருவம் கூட சுவாமியின் திருமேனியில் தெரிகிறது .அனைவரும் காண வேண்டிய அற்புத திருமேனியாகும் .இங்கு சுவாமி , அம்பாள் , நந்திதேவர் பிரதிஷ்டையுடன் , மேற்கூரையும் அமைத்து வழிபாடு இனிதே நடைபெற்றது .இங்கு அமைத்த மேற்கூரை 10  அடிக்கு 20 அடி நீலமுள்ளது .இதற்கான செலவில் இக்கிராமமக்கள் Rs .10000 நம் சிவசபைக்கு வழங்கினார்கள் .

தொடர்புக்கு - திரு .உதயகுமார் -9443110019 , திரு .ஏழுமலை -9626340515
i ) திருப்பணிக்குப் பின்பு

ii


iii

iv


v

vi

56.SIRUVANGUNAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

08/06/2014

சிறுவங்குணம் - அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோவில் .ரோடு ஓரத்தில்  வைத்திருக்கும் சுவாமிக்கு திருவருளால் மேற்கூரை அமைக்கப்பட்டது .

i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

55.ARAPAEDU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

01/06/2014
அறப்பேடு - அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் , அச்சிறுப்பக்கம் தாண்டி 2km ல்  ஹோட்டல் ஹரிதம் சேர்ந்து இடது பிரியும் வழியில் 1 km ல் இவ்வூர் உள்ளது . சுவாமி பச்சை நிறம் கொண்ட சிவலிங்க திருமேனியாக அருள்பாலிக்கிறார் . நந்திதேவர் மூர்த்தம் பழுது பட்டிருந்தது .ஸ்தபதியை வரச்செய்து சரிசெய்து திருவருளால் சுவாமி பிரதிஷ்டையும் , நந்திதேவர் பிரதிஷ்டையும் செய்து , மேற்கூரை அமைத்து வழிபாடு இனிதே தொடங்கியது . இந்த மேற்கூரைக்கான செலவு தொகையான Rs .15000 லண்டன் சிவத்திரு .வேதநாராயணன் ஐயா  அவர்கள் வழங்கி உள்ளார்கள் .

தொடர்புக்கு - திரு .முருகன்- 9940950136

i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii )

iv )

v )