57.SIRUVANGUNAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

08/06/2014
சிறுவங்குணம் - அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் .இத்திருப்பணி நமது சிவசபைக்கு எம்பெருமான் கொடுத்த அருட்கொடையாகும் .சுவாமியின் அழகை வார்த்தைகளால் கூற இயலாது .நம்முடைய நெற்றி புருவம் கூட சுவாமியின் திருமேனியில் தெரிகிறது .அனைவரும் காண வேண்டிய அற்புத திருமேனியாகும் .இங்கு சுவாமி , அம்பாள் , நந்திதேவர் பிரதிஷ்டையுடன் , மேற்கூரையும் அமைத்து வழிபாடு இனிதே நடைபெற்றது .இங்கு அமைத்த மேற்கூரை 10  அடிக்கு 20 அடி நீலமுள்ளது .இதற்கான செலவில் இக்கிராமமக்கள் Rs .10000 நம் சிவசபைக்கு வழங்கினார்கள் .

தொடர்புக்கு - திரு .உதயகுமார் -9443110019 , திரு .ஏழுமலை -9626340515
i ) திருப்பணிக்குப் பின்பு

ii


iii

iv


v

vi

56.SIRUVANGUNAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

08/06/2014

சிறுவங்குணம் - அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோவில் .ரோடு ஓரத்தில்  வைத்திருக்கும் சுவாமிக்கு திருவருளால் மேற்கூரை அமைக்கப்பட்டது .

i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

55.ARAPAEDU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

01/06/2014
அறப்பேடு - அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் , அச்சிறுப்பக்கம் தாண்டி 2km ல்  ஹோட்டல் ஹரிதம் சேர்ந்து இடது பிரியும் வழியில் 1 km ல் இவ்வூர் உள்ளது . சுவாமி பச்சை நிறம் கொண்ட சிவலிங்க திருமேனியாக அருள்பாலிக்கிறார் . நந்திதேவர் மூர்த்தம் பழுது பட்டிருந்தது .ஸ்தபதியை வரச்செய்து சரிசெய்து திருவருளால் சுவாமி பிரதிஷ்டையும் , நந்திதேவர் பிரதிஷ்டையும் செய்து , மேற்கூரை அமைத்து வழிபாடு இனிதே தொடங்கியது . இந்த மேற்கூரைக்கான செலவு தொகையான Rs .15000 லண்டன் சிவத்திரு .வேதநாராயணன் ஐயா  அவர்கள் வழங்கி உள்ளார்கள் .

தொடர்புக்கு - திரு .முருகன்- 9940950136

i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii )

iv )

v )

54.KEELSAERI

29/12/2013

கீழ்சேரி - மதுராந்தகம் -முதுகரை -சித்தாமூர்-செய்யூரிலிருந்து 3 km ல் இவ்வூர் உள்ளது .செடி கொடிகளின் புதரில் சுவாமி அருள்பாலிக்கிறார் . காரைக்கால் அம்மையார் அப்பா என்று அழைத்த நம் சுவாமி எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

25/05/2014
அருள்மிகு வைத்தீசுவரர் திருக்கோவில் , கீழ்ச்சேரி

சிவபெருமான் தனிப்பெருங் கருணையினால் சுவாமி எடுத்து உயர்த்தி பிரதிஸ்டை செய்து , மேற்கூரை அமைத்து குட நன்னீராட்டு சிறப்பாக நடந்தேறியது .நம் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபையின் அமைப்பாளர் சிவ.கபாலிநேசன் ஐயாவின் வழிகாட்டுதல் படி சுவாமியின் திருஉருவப்படம் , நால்வர் , நந்திதேவர் அடங்கிய நீர்செல்லா வண்ணத்தாள் மேற்கூரையின் முன் ஒட்டப்பட்டுள்ளது . மேலும் மேற்கூரையின் சுற்றிலும் தகடு அடித்தல் , கதவு அமைதல் போன்ற சிறந்த செயல்களை கூறியும் , தற்போது ஒவ்வொரு மேற்கூரை அமைக்கும்போது அங்கு ஒரு மர கன்று நடவேண்டும் என்று கருத்தையும் கூறியுள்ளார்கள்  .மேலும் ஒலி பெருக்கி கருவியையும் வழங்கியுள்ளார்கள் .இவையெல்லாம் அவர்கள் சுவாமி மீது வைத்திருக்கும் அன்பை வெளிபடுத்துவதாக நாம் உணர்வோம் . இக்கீழ்ச்சேரி கிராமத்தில் அமைத்த மேற்கூரைக்கான திருப்பணி செலவில் Rs .14000 திரு .K.P.S .P .வடிவேல் முருகன் (USA) அவர்கள் நம் சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்  .

தொடர்புக்கு -சிவ .ரவீந்திரன் -9445728185 , சிவ .அனுமந்தன் -9585638101

i ) திருப்பணிக்குப் பின்பு
ii )
iii)
iv)
V)
VI)

52 & 53.SEIYOOR

29/12/13

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


11/05/2014

அருள்மிகு வெள்ளியங்கிரீசுவரர் திருக்கோவில் , சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதீசடை இனிதே நடைபெற்று வழிபாடு தொடங்கியது .இத்திருப்பணிக்கு செய்த செலவினை இவ்வூரை சார்ந்த சிவ . திரு. மகேந்திரன்(சென்னை) அவர்கள் முழுவதுமாக ஏற்றார்கள் .மேலும் புதிய ஆவுடையார் செய்தும் , அன்பர்களுக்கு திரு அமுது செய்வித்தும் எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள் . இந்த அன்பரை போன்று ஊருக்கு ஒருவர் இருந்தாலே போதும் .அனைத்து கிராமங்களிலும் வெட்ட வெளியில் சிவலிங்க திருமேனி இல்லாத நிலை உருவாகி சைவநெறி தழைத்து ஓங்கும் .
தொடர்புக்கு - சிவ .மகேந்திரன் -7667251375.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v

51.SITHAARKAADU


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

09/02/2014
சித்தார்காடு- செய்யூரிலிருந்து 9 km ல் இவ்வூர் உள்ளது . பாளையூரின் அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமி வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிகின்றார் .


27/04/2014
அருள்மிகு சித்தீசுவரர் திருக்கோவில் , சித்தார்காடு. சிவபெருமான் திருவருளால் பச்சை நிறமுடைய மிக பழைமையான இச்சிவலிங்கத் திருமேனியையும் , நந்திதேவரையும்  உயர்த்தி பிரதிஷ்டை செய்து . 10அடிக்கு 20 அடி நீளமுள்ள மேற்கூரை அமைத்து வந்தோம் .இக்கிராமமக்கள் Rs . 10000 வழங்கினார்கள் .

தொடர்புக்கு - 9626122937 , 9047738037 , 9962267358.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv
v


50.VIPPAEDU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

20/04/2014

அருள்மிகு பானேசுவரர்  திருக்கோவில்  , விப்பேடு .காஞ்சிபுரத்திலிருந்து 8km ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , ஆவுடையார் செங்கலில் கட்டியும் , மேற்கூரை அமைத்தும் வந்தோம் சிவ.கண்ணன் ஐயாவும் அவரது திருக்கூட்டமும் நமது சிவசபைக்கு Rs . 15000 வழங்கி இத்திருப்பணிக்கான செலவினை ஏற்றார்கள் .இது போன்று ஒவ்வொரு சைவ அமைப்பும் சுவாமிக்கு ஒரு மேற்கூரையாவது அமைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டால் மிக விரைவில் வெட்ட வெளியில் பூசை இல்லாத சிவலிங்க திருமேனி இல்லாதநிலை உருவாகும் .
தொடர்புக்கு - சிவ.கண்ணன் -9940539580 , சிவ .அபிமண்யூ -8940612587.


i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii


iv
v

49.AYANAMBAKKAM

அருள்மிகு திருமேனி அழகர் திருக்கோவில்,கீழ் அயனம்பக்கம் ,சென்னை -95. இத்திருக்கோவில் அருகே திரு.M .K .விஜயகுமார் அன்பர் உள்ளார் அவரிடம் தொடர்பு கொண்டதில் அவர் திருக்கோவில் அமைக்கும் முழு பொறுப்பை ஏற்பதாக உறுதி அளித்துள்ளார் .26/06/2013 அன்று ஸதபதியை அழைத்து பேசப்பட்டது .

.
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

06/04/2014
அயனம்பாக்கம்- பொன்னியம்மன் நகர் , சென்னை .
ஆவுடையார் முழுவதும் மண்ணில் புதைந்து நிலையில் சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமியை உயர்த்தி பிரதீஷ்டை செய்து , நந்திதேவரையும் பிரதீஷ்டை செய்து வந்தோம் .இங்கு விரைவில் திருப்பணி நடைபெற உள்ளதால் அங்குள்ள அன்பர் திரு.ஜெயக்குமார் அவர்கள் சுவாமிக்கு மேல் குடிசை அமைத்துள்ளார் .

தொடர்புக்கு - திரு.ஜெயகுமார்-9840726777.

i) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii)

iv )


v )


48. ERUMBAEDU

18/08/2013

இரும்பேடு - தேவனூர் கூட்டு ரோடிலிருந்து 2 km ல் வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிகின்றார் .
தொடர்புக்கு - திரு.சதீஷ் -7639432953 , திரு. பாஸ்கரன் -9786584410.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



 30/03/2014
அருள்மிகு இரும்பேடுஈஸ்வரர் திருக்கோவில் ,சித்தாம்மூரிலிருந்து ,செய்யாறு செல்லும் வழியில் நல்லூர் கூட்டு ரோட்டிலிருந்து 2 km ல் ரோடு அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமி 1/2 km கால்வாய்க்கு உள்ளே அருள்பாலித்தார் .தற்போது அனைவரும் வழிபடும் வகையில் பள்ளிக்கூடத்தின் எதிரில் சுவாமியை பிரதிஸ்டை செய்து மேற்கூரை அணிவித்தோம் . வழிபாடு இனிதே தொடங்கியது .

i) திருப்பணிக்குப் பின்பு 


ii)
iii)
iv)

v)